/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
600 மெகாவாட் அனல் மின் நிலைய உற்பத்தி தொடக்கம்
/
600 மெகாவாட் அனல் மின் நிலைய உற்பத்தி தொடக்கம்
ADDED : செப் 20, 2024 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூரில், 840 மெகாவாட், 600 மெகாவாட் என, இரு அனல்மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அதில், 600 மெகாவாட் உற்பத்தி நிலையத்தில் கடந்த ஆக., 6ல் பராம-ரிப்பு பணி தொடங்கியது.
இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டு, 43 நாட்கள் பராமரிப்பு பணி நடந்தது. அப்பணி முடிந்து நேற்று முன்தினம் இரவு மின் உற்பத்தி ஆயத்த பணி தொடங்கியது. நேற்று காலை, ஆயில் மூலம் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் இன்று முதல் வழக்கம்போல் நிலக்கரி பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் என, மின் கழக நிர்வாகத்தினர் தெரிவித்-தனர்.