/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய சிலம்பத்தில் வெள்ளி மாணவருக்கு பாராட்டு
/
தேசிய சிலம்பத்தில் வெள்ளி மாணவருக்கு பாராட்டு
ADDED : ஆக 18, 2025 03:06 AM
பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே வாழக்குட்டப்பட்டியை சேர்ந்த கூலி விவசாய தொழிலாளி செல்லதுரை - சத்யா தம்பதியின் மகன் துளசிமணி, 17. மல்லுாரில் உள்ள, தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். மல்லுார் சிவம் சிலம்ப பயிற்சி பள்ளியில் சிலம்பம் கற்றார். கடந்த ஜூலை, 21, 22ல், டில்லியில் யூத் சிலம்பம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், தேசிய அளவில் சிலம்ப போட்டி நடந்தது. அதில் பல்வேறு மாநிலங்-களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதில் துளசிமணி, வெள்ளி பதக்கம் வென்றார். அவருக்கு, கடந்த சுதந்திர தின விழாவில், சிலம்ப பயிற்சி பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. அதில் ஆசான் மாதையன் உள்ளிட்ட ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், அறக்கட்டளை
நிர்வாகிகள் பாராட்டினர்.