தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பா.ம.க., சின்னம் பயன்படுத்துவதாக மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., மீது புகார்

பா.ம.க., சின்னம் பயன்படுத்துவதாக மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., மீது புகார்

பா.ம.க., சின்னம் பயன்படுத்துவதாக மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., மீது புகார்


ADDED : ஏப் 09, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: பா.ம.க., சின்னம் பயன்படுத்துவதாக, மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பா.ம.க.,வின், சேலம் மாநகர் மாவட்ட தலைவர் குமார் உள்-ளிட்ட நிர்வாகிகள், சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். தொடர்ந்து அவர்கள், தேர்தல் அலுவலரிடம் அளித்த மனு:

சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், அனைத்திந்திய ஜன-நாயக பாதுகாப்பு கழகம் என்ற பெயரில், வரும் சட்டசபை தேர்-தலில் போட்டி யிட வேட்புமனு அளித்துள்ளார்.

ஏற்கனவே, பா.ம.க., அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், மாற்று கட்சி பெயரில், பா.ம.க., கட்சி கொடி உள்ளிட்ட சின்னங்களை பயன்படுத்துவது, தேர்தல் கமிஷன் சட்ட விதிமுறைப்படி தவறு.

அவர் மீது நடவடிக்கை எடுத்து, பா.ம.க., சின்னம் உள்ளிட்ட-வற்றை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.

பா.ம.க., வேட்பாளராக கார்த்தி, மேற்கு தொகுதியில் போட்டியி-டுகிறார். ஆனால், பா.ம.க.,வில் இல்லாதவர், தேர்தலில் போட்-டியிடும் நிலையில், அவர், பா.ம.க., சின்னங்களை பயன்படுத்-தினால் குழப்பம் ஏற்படுவதோடு, சட்டம் - ஒழுங்கு சீர்கெடுவ-தற்கான வாய்ப்பு ஏற்பட்டு அச்சம் நிலவுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us