தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'பள்ளிகளில் புகார் பெட்டி கேமரா வைக்க வேண்டும்'

'பள்ளிகளில் புகார் பெட்டி கேமரா வைக்க வேண்டும்'

'பள்ளிகளில் புகார் பெட்டி கேமரா வைக்க வேண்டும்'


ADDED : ஆக 21, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கல்வி அலுவ-லர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டம், நேற்று நடந்தது.

கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்து பேசியதாவது:பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு, மனநலம், சுய ஒழுக்கம், செயல்பாடு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை கண்டறிந்து தடுக்க வேண்டும். சமூக வலைதளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து விழிப்புணர்வு செய்ய வேண்டும். மாணவரின் தனித்திறமையை கண்டுபிடித்து ஊக்கப்படுத்துவதோடு, தன்னம்-பிக்கையை அதிகரிக்கச்செய்ய வேண்டும். அனைத்து பள்ளிக-ளிலும் புகார் பெட்டிகள் வைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, அவை முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி., குத்தா-லிங்கம், துணை கமிஷனர் மகேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us