/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கம்ப்யூட்டர் உடைப்பு; கடன் வாங்கியவர் கைது
/
கம்ப்யூட்டர் உடைப்பு; கடன் வாங்கியவர் கைது
ADDED : நவ 29, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் விஜி, 33. இவர், சேலம், மெய்யனுாரில், நிதி நிறுவனம் நடத்துகிறார். அங்கு, சேலம், நெத்திமேட்டை சேர்ந்த நவீன்குமார், 25, லாரியின் ஆர்.சி., புத்தகம் வைத்து கடன் வாங்கியுள்ளார்.
இரு தவணைக்கு பின் செலுத்தாததால், அவரது தந்தைக்கு, அலுவலகத்தில் இருந்து போன் செய்து பேசியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், நிதி நிறுவனத்துக்கு வந்து தகராறு செய்ததோடு, கம்ப்யூட்டர், மானிட்டரை உடைத்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விஜி புகார்படி, பள்ளப்பட்டி போலீசார், நவீன்குமாரை கைது செய்தனர்.

