/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கணினி பயிற்றுனர் பணி 20க்குள் விண்ணப்பிக்கலாம்
/
கணினி பயிற்றுனர் பணி 20க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 16, 2024 01:34 AM
கணினி பயிற்றுனர் பணி
20க்குள் விண்ணப்பிக்கலாம்
சேலம், நவ. 16-
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
மாவட்டத்தில் செயல்படும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி பயிற்றுனர் பணிக்கு, 15,000 ரூபாய் தொகுதிப்பூதிய அடிப்படையில் பணிபுரிய, தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடந்த ஜூலை, 1ல், 35 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பி.எட்., கல்வி தகுதியுடன் பி.இ., கணினி அறிவியல் அல்லது பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.சி.ஏ., பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதாவது ஒரு படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். விருப்பம், தகுதி உடையவர்கள், 'தலைமையாசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம் 636 008' என்ற முகவரிக்கு வரும், 20 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதில் அனைத்து கல்வித்தகுதி சான்றிழ்களும் இணைக்கப்பட வேண்டும். தகவலுக்கு, 94999 - 33469, 0427 - 2442067 என்ற எண்களில் அழைக்கலாம்.

