/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழை பொழிய வேண்டி கூட்டு பிரார்த்தனை நிறைவு
/
மழை பொழிய வேண்டி கூட்டு பிரார்த்தனை நிறைவு
ADDED : மே 08, 2024 04:46 AM
சேலம் : மழை பொழிய வேண்டி சேலம் மாவட்ட சவுராஷ்டிரா புரோகிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நலச்சங்கம் சார்பில் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அருளிய பாசுரத்தை கடந்த, 1 முதல், பக்தர்களுடன் இணைந்து கூட்டு பிரார்த்தனையுடன் பாராயணத்தை தொடங்கினர்.
அன்று, சேலம் பட்டைக்கோவில் அருகே கிருஷ்ணர் கோவிலில் பட்டாச்சாரியார்கள், பக்தர்கள் கூடி கூட்டு பிரார்த்தனையுடன் துவங்கிய தொடர் பாராயண நிகழ்ச்சி, 6 நாட்களாக, அம்மாபேட்டை சவுந்தரராஜர், பட்டைக்கோவில் வரதராஜர், அசோக் நகர் லட்சுமி வெங்கடேசர், கிருஷ்ணா நகர் சீதா ராமச்சந்திர மூர்த்தி, பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில் தினமும் மாலை, 6:00 முதல் இரவு, 7:00 மணி வரை நடத்தப்பட்டது. நிறைவு நாளான நேற்று, வீராணம் பிரிவு அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் கூட்டு பிரார்த்தனை, ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரத்தை பட்டாச்சாரியார்களுடன் இணைந்து திரளான பக்தர்கள் தொடர் பாராயணத்தில் ஈடுபட்டனர். இத்துடன் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நிறைவடைந்தது.

