/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடுகளில் கொட்டும் கான்கிரீட் கலவை:மழையால் மக்கள் 'திக் திக்' வாழ்க்கை

ADDED : நவ 03, 2025 02:24 AM
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 10வது வார்டில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு, 25 ஆண்டுக்கு முன், குடிசை மாற்று வாரியம் மூலம், 20க்கும் மேற்பட்ட தார்சு வீடுகள் கட்டித்தரப்பட்டது. தற்போது, அந்த வீடுகளில் கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் வீட்டுக்குள் கசிந்து வருகிறது.
இதுகுறித்து, 10வது வார்டு ஸ்ரீகாந்த், 43, கூறியதாவது:வீட்டின் மேற்புற கான்கிரீட் தளம் சேதமடைந்து விட்டது. சிறிது மழை பெய்தாலும், வீட்டுக்குள் தண்ணீர் கொட்டுகிறது. கான்கிரீட் கலவையும் திடீரென பெயர்ந்து கொட்டுகிறது. இடிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில், உயிரை கையில் பிடித்தபடி குடும்பத்தினருடன் வசிக்கிறோம். சமீப நாட்களாக மழை பெய்து வருவதால், 'திக் திக்' மனதுடன், சரியாக துாங்க கூட முடியாமல் தவிக்கிறோம். அரசிடம் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. புதிதாக வீடு கட்ட பண வசதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து அலுவலர்களிடம் கேட்டபோது, 'புதிதாக வீடு கட்ட அரசு மானியம் வழங்குகிறது. அதை பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றனர்.