தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆசிரியர் வேலை நாள் வழிமுறை வெளியிடாததால் குழப்பம்

ஆசிரியர் வேலை நாள் வழிமுறை வெளியிடாததால் குழப்பம்

ஆசிரியர் வேலை நாள் வழிமுறை வெளியிடாததால் குழப்பம்


ADDED : ஏப் 08, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை, வரும், 16க்குள் தேர்வு நடத்தி முடித்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு ஏப்., 24 வரை பள்ளி வேலைநாட்கள் என்றும், தேர்வு முடிவு வெளியிடுதல், மாணவர் சேர்க்கை முன்னேற்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும், 23ல் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அப்பணியில், 80 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் வரும், 22 முதல், தேர்தல் பணிக்கு செல்ல வேண்டி இருக்கும். இதனால் தேர்வு முடிவு வெளியிடுவது உள்ளிட்ட பணிகளை முன்கூட்டியே முடிப்பதா அல்லது தேர்தலுக்கு பின்பும், பள்ளி வேலைநாட்களாக செயல்படுமா என, பள்ளி கல்வித்துறை சார்பில் இதுவரை வழிமுறை எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் குழப்பம் அடைந்துள்ளதால், உரிய தீர்வு காண வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us