/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காஷ்மீரில் இறந்தவர்களுக்கு காங்., - மா.கம்யூ., அஞ்சலி
/
காஷ்மீரில் இறந்தவர்களுக்கு காங்., - மா.கம்யூ., அஞ்சலி
காஷ்மீரில் இறந்தவர்களுக்கு காங்., - மா.கம்யூ., அஞ்சலி
காஷ்மீரில் இறந்தவர்களுக்கு காங்., - மா.கம்யூ., அஞ்சலி
ADDED : ஏப் 26, 2025 01:49 AM
சேலம்:காஷ்மீரில், பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சுற்றுலா பயணியருக்கு, சேலத்தில் நேற்று, மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகர் காங்., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு அதன் பொருளாளர் ராஜகணபதி தலைமை வகித்தார். முள்ளுவாடி கேட் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மெழுகுவர்த்தி ஏந்தியபடி புறப்பட்ட ஊர்வலம், ராஜூவ் சிலையை அடைந்தது. பின், இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மா.கம்யூ., சார்பில் சாமிநாதபுரதில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாநகர் செயலர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் குமார் பேசினார். பின் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். அதேபோல் மேச்சேரியில், ஒன்றிய செயலர் மணிமுத்து தலைமையில் மா.கம்யூ., கட்சியினர், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் தங்கவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாநில இணை செயலர் தீபக் தலைமையில் நிர்வாகிகள், சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் ராமு, சங்ககிரி நகர செயலர் பரணி, மாணவர் அமைப்பு
நிர்வாகிகள் பங்கேற்றனர்.