/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பா.ஜ., பொறுப்பாளரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
பா.ஜ., பொறுப்பாளரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ., பொறுப்பாளரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ., பொறுப்பாளரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 17, 2024 07:34 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், பா.ஜ., மாநில பொறுப்பாளர் எச்.ராஜாவை கண்டித்து, நேற்று மாலை காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ராகுல்காந்தியின் நடைபயணத்தின் நோக்கம் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கும் தெருமுனை பிரசாரம் நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். கிழக்கு வட்டார தலைவர் நாராயணன் வரவேற்றார்.
மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், கிழக்கு மாவட்ட பொதுச்செயலர் செல்வகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவிப்ரித்தா உள்ளிட்டோர் பேசினர். பின், 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் ராகுலை பற்றி தவறாக பேசிய மாநில, பா.ஜ., பொறுப்பாளர் ராஜாவை கண்டித்து, கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பனமரத்துப்பட்டி நகர தலைவர் ராஜேந்திரன், மல்லுார் நகர தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.