/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.பி.ஐ., வங்கியை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
/
எஸ்.பி.ஐ., வங்கியை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 08, 2024 03:02 AM
சேலம்:காங்., சேலம் மாநகர மாவட்டம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சியினர் நன்கொடை பெற்றனர். அதன் விபரங்களை வழங்க, எஸ்.பி.ஐ., வங்கி, 3 மாத அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாநகர பொருளாளர் ராஜகணபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் தாரமங்கலத்தில் நகர காங்., தலைவர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சாலைமறியல்
சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்துார் பாரத ஸ்டேட் வங்கி முன், மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, மத்திய அரசு, பா.ஜ.,வை கண்டித்து, கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர். ஆத்துார் நகர தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

