/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டுமான தொழிலாளரின் பிள்ளைகள் திறன் மேம்பாடு பயிற்சி பெற அழைப்பு
/
கட்டுமான தொழிலாளரின் பிள்ளைகள் திறன் மேம்பாடு பயிற்சி பெற அழைப்பு
கட்டுமான தொழிலாளரின் பிள்ளைகள் திறன் மேம்பாடு பயிற்சி பெற அழைப்பு
கட்டுமான தொழிலாளரின் பிள்ளைகள் திறன் மேம்பாடு பயிற்சி பெற அழைப்பு
ADDED : பிப் 20, 2026 05:49 AM
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைக-ளுக்கு இணைய வழி திறன்மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதனால் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் பிள்ளைகள், இளங்கலை மற்றும் முதுகலை பிரிவில் உயர்-கல்வி உதவித்தொகை பெறுவோர், திறன் மேம்-பாடு பயிற்சி பெறலாம்.
இதில் சேரும் மாணவ, மாணவியர், பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளாக இருக்க வேண்டும். நல வாரி-யத்தில் நிதியுதவி பணப்பலன் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் நிதியுதவிக்கு விண்-ணப்பித்திருக்க வேண்டும்.தொழிலாளர் குடும்பத்தில், இருவர் மட்டுமே பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர். ஒருவர், ஒரு பயிற்சி பிரிவில் பங்கேற்று, 3 ஆண்டுக்கு பிறகே, மீண்டும் மற்றொரு பயிற்சியில் பங்கேற்க இயலும். பயிற்சி பெறும் அனைவருக்கும் சான்-றிதழ் வழங்கப்படும்.தமிழகம் முழுதும், 40 பயிற்சி பிரிவில், 10,000 மாணவ, மாணவியருக்கு இணைய வழியில் பயிற்சி அளிக்கப்படும். அதனால், https://registration.tnbocw.com/ என்ற இணையத்தில் தொழிலாளியின் மொபைல் எண், நலவாரிய பதிவு அட்டையின் எண்ணை உள்ளீடு செய்து, மாணவ, மாணவியரின் மொபைல் எண், ஆதார் எண், ஆதார் அட்டை, புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து விண்ணப்-பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை, 80018 - 58687 என்ற மொபைல் எண் கொண்ட, 24 மணி நேர உதவி மையத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

