/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
6ல் இறுதி வாக்காளர் பட்டியல் அலுவலர்களுடன் ஆலோசனை
/
6ல் இறுதி வாக்காளர் பட்டியல் அலுவலர்களுடன் ஆலோசனை
ADDED : ஜன 03, 2025 01:18 AM
6ல் இறுதி வாக்காளர் பட்டியல்
அலுவலர்களுடன் ஆலோசனை
சேலம், ஜன. 3-
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்தகுமார் பேசுகையில், ''சேலம் மாவட்டத்தில் அக்., 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜன., 1ஐ தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. நவ., 28 வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து, ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,'' என்றார். டி.ஆர்.ஓ., மேனகா, மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.