ADDED : அக் 02, 2026 03:14 AM
அ நிறம் | அளவு
சேலம்: மேற்கு வங்கதை சேர்ந்தவர் மய்னுார் ஆசான், 27. சேலம் மாவட்டம் வீரபாண்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, சேலம், கருப்பூர் ரயில்வே ஸ்டேஷன்களில் ஒப்பந்த அடிப்படையில் மின் ஒயர் பழுது-பார்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.
கடந்த மாதம், 28ல் கருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, மின்கம்பத்தில் ஏறி பணியில் ஈடுபட்டடார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தீக்-காயம் அடைந்த, மய்னுார் ஆசானை மீட்டு, சேலம் அரசு மருத்து-வமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
