மேல்நிலை தொட்டியில் நின்று ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
மேல்நிலை தொட்டியில் நின்று ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
ADDED : மே 28, 2026 03:42 AM

மேட்டூர்; ஊதிய உயர்வு கேட்டு, மாநகராட்சி குடிநீரேற்று நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், மேல்நிலை தொட்டியில் ஏறி நின்று போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் காவிரி ஆற்றில் இருந்து தினமும், 1.55 கோடி மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து, சேலம் மாநகராட்சிக்கு வினியோகிக்கப்-படுகிறது. தொட்டில்பட்டியில் உள்ள சேலம் நீரேற்று நிலையத்தில், 21 ஒப்பந்த ஊழியர்கள், 13 ஆண்டாக பணிபுரிகின்றனர். அவர்கள், ஊதிய உயர்வு வழங்குதல்; மாநகராட்சி ஒப்பந்த ஊழி-யர்களுக்கு வழங்கும் சீருடை, அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 21 முதல், சுழற்சி முறையில், அதன் வளாகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர் நடவ-டிக்கை எடுக்கவில்லை.நேற்று மாலை, 6:00 மணிக்கு ஒப்பந்த ஊழி-யர்கள், 21 பேர், அங்குள்ள, 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் வருவாய்துறை அலுவலர்கள், கருமலைக்-கூடல் போலீசார் வந்து பேச்சு நடத்தினர்.
தொடர்ந்து போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன், வரும், 29ல் பேசி நடவடிக்கை எடுப்பதாக மொபைல் போனில் தெரிவித்தார்.
இதனால், 2 மணி நேர போராட்டத்தை கைவிட்டு, ஊழியர்கள் இறங்கினர். அதேநேரம் சுமுக முடிவு ஏற்படும் வரை, வளாகத்தில் போராட்டம் தொடரும் என, ஊழியர்கள் தெரிவித்தனர்.
