ஒப்பந்த ஊழியர் போராட்டம் அனைத்து கட்சியினர் பேச்சு
ஒப்பந்த ஊழியர் போராட்டம் அனைத்து கட்சியினர் பேச்சு
ADDED : ஜூன் 12, 2026 04:28 AM
ஓமலுார்; சேலம், கருப்பூர் சுங்கச்சாவடி ஒப்பந்த காலம், ஆக., 16ல் முடிய உள்ளது. அங்கு ஒப்பந்த அடிப்ப-டையில், 84 பேர் பணிபுரிகின்றனர். அவர்கள், விடுமுறை நாட்களில் பணியாற்றிய சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்களை வழங்க-வில்லை எனக்கூறி, கடந்த, 8 முதல், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று காலை, சுங்கச்சாவடி அலுவலகம் முன், சாமியானா பந்தல் அமைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக, அ.தி.மு.க.,வின், ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி பங்கேற்றார்.தொடர்ந்து சுங்கச்சாவடி தலைமை அலுவலர் சுரேந்தர் ராவத், ஒப்பந்ததாரர் ரவீந்திரநாத், பணி-யாளர்கள் உள்ளிட்டோருடன், மாலை, 4:00 மணிக்கு பேச்சு தொடங்கியது. தி.மு.க., - பா.ம.க., - வி,சி., - நா.த.க., உள்பட பல்வேறு கட்சி நிர்வா-கிகள், பணியாளர்கள் சார்பில் உதவி சிப்ட் அலு-வலர் ஜெயக்குமார் பேச்சு நடத்தினர். இரவு, 9:30 மணி வரை பேச்சு நீடித்தது.
