தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சோனா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சோனா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சோனா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


ADDED : மார் 28, 2024 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2024 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் : சேலம் சோனா கலை அறிவியல் கல்லுாரியில், 3வது பட்டமளிப்பு விழா நடந்தது.

சோனா கல்வி நிறுவன தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் சொக்கு, தியாகு முன்னிலை வகித்தனர். முதல்வர் காதர் நவாஷ், அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் குழந்தைவேலு, பெங்களூரு டெசோல்வ் செமிகண்டக்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவன இணை நிறுவனர் வீரப்பன், 2020 - -2023 கல்வியாண்டில் படித்த, 822 மாணவர்களுக்கும், முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கினர்.மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலா, 10,000 ரூபாய், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு தலா, 7,500, மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா, 5,000, மற்ற தரவரிசை பெற்ற மாணவர்களுக்கு தலா, 3,000 என, 1,60,000 ரூபாய், சோனா கல்வி நிறுவனம் சார்பில் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பல்கலை அளவில் தர வரிசையில் சிறப்பிடம் பெற்ற, 37 மாணவர்களுக்கு, சோனா கல்வி நிறுவனம் சார்பில், 5,000 ரூபாய் மதிப்பில் தங்கப்பதக்கம் என, 1,85,000 ரூபாய் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us