/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று முதல் 20 வரை கூட்டுறவு வார விழா
/
இன்று முதல் 20 வரை கூட்டுறவு வார விழா
ADDED : நவ 14, 2024 07:40 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் அனைத்திந்திய, 71வது கூட்டுறவு வாரவிழா இன்று தொடங்கி, வரும், 20 வரை நடக்கிறது. இன்று கூட்டுறவு சங்கங்களில் கொடி ஏற்றுதல், உறுதிமொழி வாசித்தல், மரக்கன்றுகள் நடப்படுகின்றன. நாளை, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், விவசாய கூட்டு பொறுப்பு குழுக்கள் சந்திப்பு முகாம், வட்டார அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும், 16ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி - வினா ஓவியப்போட்டிகள் நடத்தப்படும். 18ல் பொன்னம்பாளையம், வெள்ளாளப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில்
இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடக்கும். 19ல் பெண்கள், இளைஞர்கள் பங்களிப்பை அதிகரித்தல், நலிந்த பிரிவின் பொருளாதார முன்னேற்றத்தில் கூட்டுறவின் பங்களிப்பு, பெண்களின் முன்னேற்றமும்
கூட்டுறவும் தலைப்புகளில் கருத்தரங்கம், சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடக்க உள்ளது. 20ல் கூட்டுறவு வார விழா நிறைவு பெறுகிறது.