/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூட்டுறவு எழுத்துத்தேர்வு:701 பேர் வரவில்லை
/
கூட்டுறவு எழுத்துத்தேர்வு:701 பேர் வரவில்லை
ADDED : அக் 12, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில், 148 உதவியாளர், எழுத்தர் காலி இடங்களுக்கு, 4,068 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியுடைய, 3,939 பேர் தேர்வு செய்யப்பட்டு, சேலத்தில், 4 மையங்களில் எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது.
காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடந்த தேர்வை, 3,238 பேர் எழுதினர். 701 பேர் வரவில்லை. 200 மதிப்பெண்ணுக்கு, கொள்குறி முறையில் தேர்வு நடந்தது. மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் குழந்தைவேலு, மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார், மையங்களை பார்வையிட்டனர்.