ADDED : அக் 09, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
சேலம்;சேலம், அஸ்தம்பட்டி, வசந்தபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார், 49. தனியார் மொபைல் போன் டவர் நிறுவனத்தில் டெக்னீஷியனாக பணிபுரிகிறார். கடந்த, 27ல், பொன்னம்மாபேட்டை, சுப்ராயன் நகரில், டவர் பராமரிப்புக்கு சென்றார். அப்போது, 6,000 ரூபாய் மதிப்பில் காப்பர் ஒயர் திருடுபோனது தெரிந்தது.
இதுகுறித்து அவர் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்ததில், பொன்னம்மாபேட்டை, புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சந்தோஷ், 29, திருடியது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
