ADDED : ஜன 08, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ கொப்பரை விலை, 150 ரூபாய்க்கு மேல் கிடைத்தது.
இதனால் கடந்த வாரம், 1,530 கிலோவாக இருந்த வரத்து நேற்று, 2,986 கிலோ என, இரு மடங்காக அதிகரித்தது. ஆனால் நேற்று, கிலோ கொப்பரை, 98 முதல், 146 ரூபாய் வரை விலை போனது. இதன்மூலம், 3.90 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
ஓமலுாரில் ஏலம்
ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் கொப்பரை ஏலம் நடந்தது. விவசாயிகள், 184 மூட்டைகளில் கொப்பரை கொண்டு வந்தனர். வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப, கிலோவுக்கு, 82.99 முதல், 145.10 ரூபாய் வரை ஏலம் கோரினர். 75.28 குவிண்டால் மூலம், 9.64 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.