நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்-கத்தில், நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 760 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஒரு குவிண்டால் ஆர்.சி.எச். ரகம் பருத்தி, 8,920 முதல் 8,099 ரூபாய் வரையும், டி.சி.எச். ரகம் பருத்தி, 10,779 முதல், 9,059 ரூபாய் வரையும் விலை போனது. கொட்டு பருத்தி, அதிகபட்சமாக 5,109 முதல் 6,539 ரூபாய் வரை விலை போனது.நேற்றைய ஏலத்தில், 25.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்-றது. கடந்த வாரம், 9.50 லட்சத்திற்கு ஏலம் நடந்த நிலையில், நேற்று நடந்த ஏலத்தில் பருத்தி வரத்து அதிகரித்து, விற்பனை கூடியது.

