/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தம்பதி சண்டை : வீடியோ எடுத்ததால் கோஷ்டி மோதல்
/
தம்பதி சண்டை : வீடியோ எடுத்ததால் கோஷ்டி மோதல்
ADDED : செப் 27, 2025 01:47 AM
சேலம், சேலம், இரும்பாலை அடுத்த தளவாய்பட்டி ஏரிக்கரையை சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர் சமீபத்தில், அங்குள்ள மாரியம்மன் கோவிலில், 'வெல்டிங்' வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கோவில் பூசாரி, அவரது மனைவி சண்டையிட்டு கொண்டதை, அதே பகுதியை சேர்ந்த பாபு, மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். இதை மணிகண்டன் தட்டிக்கேட்க, கோஷ்டி மோதல் உருவானது.
தொடர்ந்து பாபு, கோகுல்ராம் உள்ளிட்ட உறவினர்கள், மணிகண்டனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அதேபோல் மணிகண்டன் உள்பட, 4 பேர் தாக்கியதாக, தினேஷ்குமார், பாபு ஆகியோர், சேலம் அரசு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு தரப்பு புகார்கள் மீது, இரும்பாலை போலீசார்
விசாரிக்கின்றனர்.