ADDED : டிச 23, 2025 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: கிணற்றினுள் தவறி விழுந்த பசு மாட்டை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
தலைவாசல் அருகே, நாவலுார் தெற்கு மூலக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமராஜ், 50. இவரது விவசாய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு, நேற்று அப்பகுதியில், 40 அடி ஆழம், 20 அடி தண்ணீர் உள்ள கிணற்றினுள் தவறி விழுந்தது.
தகவலறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் விழுந்த பசு மாட்டை, ஒரு மணி நேரம் போராட்டத்-திற்கு பின், உயிருடன்
மீட்டனர்.

