/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சி.ஆர்.பி.எப்., ஓய்வு வீரர் விபத்தில் பலி
/
சி.ஆர்.பி.எப்., ஓய்வு வீரர் விபத்தில் பலி
ADDED : டிச 05, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம், வெட்னிக் கரட்டை சேர்ந்தவர் குணசேகரன், 67. ஓய்வு பெற்ற, சி.ஆர்.பி.எப்., வீரர். இவர் நேற்று மதியம், 1:30 மணிக்கு ரேஷன்
கடைக்கு, யமஹா பைக்கில், தாரமங்கலம் - ஜலகண்டாபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தாரமங்கலத்தில் இருந்து, 'யமஹா ஆர் 15' பைக்கை ஓட்டிவந்தவர், குணசேகரன் மீது மோதினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துமவ-னைக்கு அனுப்பினர். ஆனால் அவர்
இறந்துவிட்டது தெரிந்தது. குணசேகரனின் மகன் கார்த்திக் புகார்படி, விபத்து ஏற்படுத்தி-விட்டு
தப்பியவரை, தாரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.