/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை இணையும் இடத்தில் இருளால் விபத்து அபாயம்
/
சாலை இணையும் இடத்தில் இருளால் விபத்து அபாயம்
ADDED : டிச 22, 2024 12:47 AM
பனமரத்துப்பட்டி, டிச. 22-
சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், மல்லுார் பிரிவில் பாலம் கட்டுமானப்பணி நடக்கிறது. பிரதான சாலை மூடப்பட்டு, சர்வீஸ் சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
ஆனால் சர்வீஸ் சாலையில் தெருவிளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்துள்ளது. மல்லுார் பிரிவு அருகே பனமரத்துப்பட்டியில் இருந்து வரும் சாலை, சேலம் - நாமக்கல் சாலையில் இணைகிறது. அங்கும் இரவில் இருள் சூழ்ந்துள்ளது.
பனமரத்துப்பட்டி சாலையில் வரும் வாகனங்கள், நெடுஞ்சாலையில் நுழைகின்றன.
அப்போது, நெடுஞ்சாலையில் நேராக, வேகமாக வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இருள் சூழ்ந்துள்ளதால் நெடுஞ்சாலையில் நேராக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, பக்கவாட்டில் பனமரத்துப்பட்டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் குறித்து தெரிவதில்லை.
இதனால் விபத்து ஏற்படுகிறது. இருள் சூழ்ந்த சாலை சந்திப்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுகின்றனர்.
இதனால் நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி சாலை இணையும் இடத்தில் மின் விளக்குகள் பொருத்த, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.