ADDED : ஆக 20, 2026 03:10 AM

ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை, கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி ஆகியவை, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளன. மாணவ, மாணவியர், நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவே, பல்-கலை - கல்லுாரி இடையே மேம்பாலம் கட்டப்பட்டது. கல்லுாரி வாகனங்கள், அந்த பாலத்தின் கீழ் சென்று வருகின்றன.
மாணவர்கள், நெடுஞ்சாலையை கடந்து செல்லக்கூடாது என்பதற்-காக, கல்லுாரி எதிரே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மாணவ, மாணவியர் உள்ளிட்டோர், அந்த தடுப்பு களை தாண்டி, எதிரே உள்ள டீ, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கும் செல்கின்றனர். இதனால் சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள், சில நேரங்களில் தடுமாறுகின்றனர். மாணவ, மாணவியரும் விபத்தில் சிக்கும் சூழல் நிலவுகிறது. விபத்து ஏற்படாதபடி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
