ADDED : செப் 23, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், : சேலம் மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்ததால், டேனிஷ்பேட்டை அடுத்துள்ள வனப்பகுதியில், உள்கோம்பையில் உருவாகும், மேற்கு சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் டேனிஷ்பேட்டை பஞ்., ஏரிக்கு நீர் வரத்து துவங்கி, நேற்று அதிகாலை ஏரி நிரம்பி, கோடி விழுந்து, அதன் உபரி நீர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கோட்டைகுள்ளமுடையால் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. நேற்று மாலை வரை கோட்டைகுள்ளமுடையான் ஏரி, 60 சதவீதம் ஏரி நிரம்பியது. டேனிஷ்பேட்டை ஏரியில் கோடி விழுந்த தண்ணீரில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.