/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வணிக வளாகம் கட்ட முடிவு;தற்காலிக கடைகள் இடிப்பு
/
வணிக வளாகம் கட்ட முடிவு;தற்காலிக கடைகள் இடிப்பு
ADDED : ஆக 22, 2024 03:49 AM
மேட்டூர்: மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் போக்குவரத்து பணிமனையில் இருந்து சதுரங்காடி செல்லும் சாலையின் ஒரு பகுதியில் ஜவுளி, ஓட்டல், ஐஸ்கீரிம் உள்பட, 15க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் இருந்தன. அந்த இடத்தின் பின்புறம், நகராட்சி குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் ஊழியர்கள் யாரும் வசிக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில், 3.55 கோடி ரூபாய் செலவில், 22 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்ட நகராட்சி முடிவு செய்தது.
இதனால் அப்பகுதி சாலையோரம் இருந்த, 15க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளை அகற்ற, ஏற்கனவே உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கடைகளில் இருந்த உடைமைகளை அகற்றினர். இந்நிலையில் நேற்று நகர அமைப்பு அலுவலர் நிர்மலா தேவி, நகர அமைப்பு ஆய்வாளர் குமரேசன் உள்ளிட்டோர் முன்னிலையில், பொக்லைன் மூலம் தற்காலிக கடைகள் இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து நகராட்சி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அப்பகுதியில் விரைவில் வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கும் என, நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.