ADDED : டிச 25, 2024 07:40 AM
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. கடந்த வாரத்தை விட, 600 கிலோவுக்கு மேல் வரத்து குறைந்து, 1,558 கிலோவாக சரிந்தது. மேலும் கடந்த வாரம் ஒரு கிலோ கொப்பரை, 140க்கு விற்ற நிலையில், நேற்று, 143 ரூபாய், 10 காசுகள் விலை கிடைத்தது. குறைந்தபட்ச விலையில், கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 12 ரூபாய் குறைந்து, 100 ரூபாய் மட்டும் கிடைத்தது. 1,558 கிலோ கொப்பரை மூலம், 2.05 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதேபோல் ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், கிலோ, 90.12 முதல், 143.99 ரூபாய் வரை ஏலம் கோரினர். 48.81 குவிண்டால் மூலம், 6.04 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
