/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முடிவு அறிவிக்க தாமதம் தேர்தல் அலுவலர் விளக்கம்
/
முடிவு அறிவிக்க தாமதம் தேர்தல் அலுவலர் விளக்கம்
ADDED : ஜூன் 05, 2024 04:45 AM
சேலம் : சேலம் லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள், தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. சுற்று வாரியாக எண்ணி முடித்த பின், வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரத்தை ஒலிபெருக்கி மூலம் அறிவித்தும், ஓட்டு எண்ணும் மையம் முன் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் எழுதியும் தெரிவிக்கப்பட்டது. எனினும் முதல் சுற்று எண்ணிக்கையை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. காலை, 11:20க்கு தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதேபோல், 2வது சுற்று, மதியம், 12:55, 3வது சுற்று, 2:13 மணிக்கு என, தொடர்ந்து தாமதமாகவே அறிவிக்கப்பட்டது. 12வது சுற்று மாலை, 5:23 மணிக்கு வெளியிடப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி கூறுகையில், ''6 சட்டசபை தொகுதிக்குரிய சுற்று முடிவை மொத்தமாக கணக்கிட்டு அறிவிக்க தாமதமாகிறது. எல்லோரும் கடைசியில் துல்லிய கணக்கீட்டை வெளியிடுவர். அதை நாங்கள் முன்னதாகவே செய்வதால் தாமதமாகிறது. 3 சுற்றுக்கு பின் அவை சரியாகிவிடும்,'' என்றார்.