/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
25 கிலோவுக்கு குறைந்த 'பேக்கிங்' அரிசிக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்க வலியுறுத்தல்

ADDED : மார் 24, 2025 06:59 AM
சேலம்: 'பேக்கிங்' செய்து 25 கிலோவுக்கும் குறைவாக விற்கும் அரிசிக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல், அரிசி வணிகர் சங்க சம்மேளனத்தின், மாநில பொதுக்குழு கூட்டம், சேலத்தில் தலைவர் துளசிங்கம் தலைமையில் நேற்று நடந்தது. இதுகுறித்து துளசிங்கம் கூறியதாவது:அன்றாட தேவைக்கு, 5, 10 கிலோ அரிசி வாங்கும் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதால், 25 கிலோவுக்கு குறைவாக, 'பேக்கிங்' செய்து விற்கும் அரிசிக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தவிடுக்கும் முழு விலக்கு அளிக்க வேண்டும்.
ஆலைகளுக்கு தேவையான நெல்லை, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்தால் மட்டும் சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும். வேளாண் துறையினர், ஆலை உரிமையாளர்கள், நேரடியாக விவசாயிகள், வெளி மாநிலங்களில் கொள்முதல் செய்தாலும் சந்தை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.அரிசி ஆலைகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில், செவ்வாய்ப்பேட்டை நெல் அரிசி உணவு பொருள் மொத்த வியாபாரி சங்க செயலர் ரத்தினவேல், தலைவர் சந்திரசேகரன், சம்மேளன மாநில செயலர் மோகன், பொருளாளர் கணேச அருணகிரி, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், கருத்துகளை தெரிவித்தனர்.