/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டுமான பொருட்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வர கோரிக்கை
/
கட்டுமான பொருட்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வர கோரிக்கை
கட்டுமான பொருட்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வர கோரிக்கை
கட்டுமான பொருட்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வர கோரிக்கை
ADDED : டிச 19, 2024 07:23 AM
சேலம்: சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம், அஸ்தம்பட்டியில் நேற்று நடந்தது. தலைவர் எழில்நிலவன் தலைமை வகித்தார்.அதில் கட்டுமான தொழிலின் மூலப்பொருட்களான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்றவற்றின் விலையை, கிரஷர் உரிமையாளர்கள், 33 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது கண்டிக்கதக்கது. இதுவரை இல்லாத விலையேற்றதால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜல்லி ஆலை உரிமையாளர்களை அழைத்து, தமிழக அரசு பேச்சு நடத்தி விலையேற்றத்தை கட்-டுக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் விலை உயர்வை கண்-டித்தும், குறைக்க வலியுறுத்தியும், விரைவில் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. செயலர் சங்கர்பாபு, துணைத்தலைவர் சரவணன், பொருளாளர் விஜயகுமார், துணை செயலர் குபேரன், கவுரவ தலைவர் அண்-ணாமலை, செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.