ADDED : ஜன 05, 2026 04:54 AM

அ நிறம் | அளவு
சேலம்: வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவத்தை கண்-டித்து, சேலம், செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே, சி.ஐ.டி.யு., சுமை துாக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிற்சங்க பொருளாளர் சக்-திவேல் தலைமை வகித்தார். அதில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தலைவர் தியாகராஜன், தொழிலாளர்கள், அமெரிக்க அரசுக்கு எதி-ராக கோஷங்களை எழுப்பினர். அதேபோல் சேலம், புது பஸ் ஸ்டாண்டில் மா.கம்யூ., சார்பில், வடக்கு மாநகர செயலர் பிரவீன்குமார் தலைமையில் அக்கட்சி-யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத்தில் பல்வேறு பகுதி-களில், அமெரிக்க ராணுவத்தை கண்டித்து கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
