ADDED : நவ 29, 2025 01:02 AM
சேலம்மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, தொ.மு.ச., பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சேலம், 5 ரோடு, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் பழனியப்பன் தலைமை வகித்தார்.
அதில், 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெறுதல்; நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளை ஒழிக்காதே; போராடி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்காதே; முறைசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கிடு; பணமாக்கல் பெயரில் பொது சொத்துகளை சீரழிக்காதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இணைப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல் சேலம் கோட்டை மைதானத்தில், சி.ஐ.டி.யு., அனைத்து சுமை பணி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரயில்வே ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர் சங்க தலைவர் வெங்கடபதி தலைமை வகித்தார்.
அதில் தொழிலாளர்களின், 4 சட்ட தொகுப்பை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
23ல் தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
சேலம், நவ. 29
சேலம் கிழக்கு கோட்ட தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், டிச., 23 மதியம், 2:00 மணிக்கு, கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஓய்வூதியர்கள் குறைகளை, டிச., 10க்குள், 'கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர்' அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என, கிழக்கு கோட்ட தபால் முதுநிலை கண்காணிப்பாளர் முனிராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

