ராஜவாய்க்காலை முழுமையாக சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ராஜவாய்க்காலை முழுமையாக சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 19, 2026 05:34 AM

சேலம்:ராஜவாய்க்காலை
முழுமையாக சீரமைக்கக்கோரி, சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று,
பச்சப்பட்டி, சங்கிலி ஆசாரிக்காடு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
சேலம்
மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்தில் ராஜவாய்க்கால் உள்ளது. அதில்
கழிவுநீர் ஓடுகிறது. ஆனால் திருமணிமுத்தாற்றில் கலக்கும் பகுதி வரை
முழுமையாக சீரமைக்காமல் அரைகுறையாக சீரமைத்துள்ளனர். குறிப்பாக
பச்சப்பட்டி, சங்கிலி ஆசாரிக்காடு பகுதிகளில், ராஜவாய்க்கால்
தடுப்புகள் இன்றி ஆங்காங்கே சுவர் கட்ட தோண்டிய பள்ளங்கள்
மூடப்படாமல் ஆண்டுக்கணக்கில் அப்படியே உள்ளன. இதனால் கழிவுநீர்
வெளியேற வழியின்றி தேங்கி துர்நாற்றத்துடன் கொசுக்களின் உற்பத்தி
மையமாக மாறியுள்ளது. மழைக்காலங்களில் விஷ ஜந்துக்கள்
வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. மாநகராட்சி நிர்வாகம்
ராஜவாய்க்கால் சீரமைப்பு பணிகளை முழுமையாக முடித்து, சாலை,
தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
