முறைசாரா தொழிலாளர் நல வாரியம் முறையாக செயல்படுத்த ஆர்ப்பாட்டம்
முறைசாரா தொழிலாளர் நல வாரியம் முறையாக செயல்படுத்த ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2026 05:32 AM
சேலம்;முறைசாரா தொழிலாளர் நல வாரியத்தை முறையாக செயல்படுத்தக்கோரி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், சேலம், கோரிமேடில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார்.
சாலை போக்குவரத்து சங்க மாநில துணை தலைவர் தியாகராஜன் பேசியதாவது: முறை-சாரா தொழிலாளர் நல வாரியத்தில் சமர்ப்பிக்கப்-படும் மனுக்களை முறையாக பரிசீலித்து, பணப்-பலன்களை உடனுக்குடன் வழங்காமல் தாமதம் செய்யப்படுகிறது.
அதேபோல் கட்டுமான நல வாரியத்தின் முத்த-ரப்பு கமிட்டியை அமைத்து, அனைத்து துறை முறைசாரா தொழிலாளர்களுக்கும், நல வாரி-யங்கள் மூலம், 5,000 ரூபாய் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். நல வாரிய பணப்பலன்களை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இரு மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து முறை-சாரா தொழிலாளர்களுக்கும், 3,000 ரூபாய் ஓய்வூ-தியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட செயலர் கோவிந்தன், பொருளாளர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
