/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்;ஆத்துாரில், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், நேற்று கிளை தலைவர் கலைமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தாலுகாவில் சான்று வழங்குவதற்கு, தனியாக துணை தாசில்தார்கள் நியமிக்க வேண்டும்.
உங்கள் ஊரில் உங்களை தேடி, மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட அரசு திட்டப்பணிகளில் அதிகளவில் பணி நெருக்கடி ஏற்படுகிறது. இப்பணிகளுக்கு உரிய அவகாசம் வழங்கிட வேண்டும் உள்பட, பத்து அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

