/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேறு, சகதியான சாலை சீரமைக்க ஆர்ப்பாட்டம்
/
சேறு, சகதியான சாலை சீரமைக்க ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2024 01:30 AM
சேறு, சகதியான சாலை
சீரமைக்க ஆர்ப்பாட்டம்
தலைவாசல், நவ. 21-
தலைவாசல் அருகே சதாசிவபுரம் ஊராட்சி, 8வது வார்டு, வடக்கு காட்டில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், குடும்பத்துடன் வசிக்கின்றனர். இரு மாதங்களுக்கு முன், சுகாதார வளாகம் முதல், கருப்பண்ணார் கோவில் வரை, 1 கி.மீ.,க்கு, தேசிய ஊரக வேலை திட்டத்தில், 19 லட்சம் ரூபாயில், ஈரடுக்கு கப்பி(ஜல்லி) சாலை அமைக்கப்பட்டது.
அச்சாலையில், ஏரியின் மண் கொட்டியதால், சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் சேறு, சகதியாக மாறியுள்ளது. மக்கள், விவசாயிகள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். இதனால் சாலையை சீரமைக்கக்கோரி, சேறு, சகதியான சாலையில் அமர்ந்து, நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் ரஜினி கூறுகையில், 'ஏரி மண் கொட்டவில்லை. மழை பெய்ததால் ஜல்லி, மண் கலந்த சாலை சேறு, சகதியாக மாறியுள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு பின், தலைவாசல், பி.டி.ஓ., உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர். சாலை மீது, 'கிராவல்' மண் கொட்ட, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்' என்றார்.

