/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துணை முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
/
துணை முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : நவ 28, 2024 06:33 AM
சேலம்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா, ஓம-லுாரில், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி சார்பில் நேற்று கொண்டா-டப்பட்டது. ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில் 'கேக்' வெட்டி, கட்சியினர்
கொண்டாடினர். தொடர்ந்து, 500 பேருக்கு, இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர்கள் சண்-முகம், அழகிரி, ஓமலுார் டவுன் பஞ்சாயத்து
தலைவி செல்வ-ராணி, பேரூர் செயலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல்
காடையாம்பட்டி பேரூர் செயலர் பிரபாகரன் தலை-மையில் நடந்த விழாவில் ஒன்றிய செயலர் அறிவழகன், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு
இனிப்பு வழங்கினார்.
மேட்டூர் நகர தி.மு.க., சார்பில், நகர செயலர் காசிவிஸ்வநாதன் தலைமையில் கட்சியினர், மேட்டூர் பஸ்
ஸ்டாண்டில் பயணிய-ருக்கு இனிப்பு வழங்கினர். மேட்டூர் சுடரொளி பார்வையற்றோர் இல்லத்தில் தங்கி
இருப்பவர்களுக்கு காலை, மதிய உணவு, பிற்-பட்டோர் நலத்துறை விடுதி மாணவர்களுக்கு மதிய உணவு
வழங்கப்பட்டன.
மேட்டூர் அம்மா உணவகத்தில், நேற்று முதல், 10 நாட்களுக்கு, தி.மு.க., சார்பில், காலை, மதிய உணவு
வழங்கப்படுகிறது. நகர அவைத்தலைவர் ராஜா, மாவட்ட துணை செயலர் எலிசபெத் ராணி, துணை
செயலர்கள் ரவி, முருகேசன், நகராட்சி தலைவர் சந்திரா உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல்
கொளத்துாரில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய செயலர் மிதுன்சக்கரவர்த்தி, பேரூர்
செயலர் நடராஜன் உள்ளிட்ட நிர்வா-கிகள் பங்கேற்றனர்.
தாரமங்கலம் நகர தி.மு.க., சார்பில், நகர செயலர் குணசேகரன் தலைமையில் கட்சியினர், இனிப்பு
வழங்கினர். எக்காம்வெல் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு, அசைவ உணவு வழங்-கினர்.
இடைப்பாடியில் நகர செயலர் பாஷா இனிப்பு வழங்-கினார். அவைத்தலைவர் மாதையன், துணை செயலர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொங்கணாபுரம் அருகே உள்ள
ஆதரவற்றோர் இல்-லத்தில் உள்ள முதியோர்களுக்கு, மாவட்ட துணை செயலர் சம்-பத்குமார், ஒன்றிய
செயலர் பரமசிவம் உள்ளிட்டோர் உணவு வழங்கினர்.
மல்லுார் தி.மு.க., சார்பில், அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, இனிப்பு,
எழுதுபொருட்களை வழங்-கினர். பொறுப்பாளர் சுரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பனமரத்துப்பட்டி
டவுன் பஞ்சாயத்து காந்தி நகரில் ஒன்றிய செயலர் உமாசங்கர் கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். நகர
செயலர் ரவிக்குமார், டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் பிரபுகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.