sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'அடைமழை' என்றாலும் புத்தக தேடல் ஓயாது புத்தக கண்காட்சியில் குவிந்த மக்கள்

/

'அடைமழை' என்றாலும் புத்தக தேடல் ஓயாது புத்தக கண்காட்சியில் குவிந்த மக்கள்

'அடைமழை' என்றாலும் புத்தக தேடல் ஓயாது புத்தக கண்காட்சியில் குவிந்த மக்கள்

'அடைமழை' என்றாலும் புத்தக தேடல் ஓயாது புத்தக கண்காட்சியில் குவிந்த மக்கள்


ADDED : டிச 01, 2024 01:34 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், டிச. 1-

சேலத்தில் நேற்று காலை முதல் அடைமழை பெய்து வந்த போதும், புத்தக கண்காட்சியில் திரளான மாணவ, மாணவியர், மக்கள், ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை வாங்கிச்சென்றனர்.

அறிவுக்கான தேடல் எப்போதும் ஓய்வதில்லை. சிந்தனைகளை தட்டி எழுப்பும் புத்தகங்களை, எத்தனை, 'டிஜிட்டல்' சாதனங்கள் வந்தாலும் முறியடிக்க முடியாது என்பதை, வாசகர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.

புத்தக கண்காட்சியில், தேனை சுவைக்கும் தேனீக்களாய், புத்தகங்களை தேடி வரும் வாசகர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

அதன்படி சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியின், 2ம் நாளான நேற்று, காலை முதலே அடைமழை பெய்து வந்தது. இருந்தபோதும், பள்ளிகளில் இருந்து பஸ்களில் அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவியர், புது பஸ் ஸ்டாண்ட் வந்த பயணியர், மக்கள் என, புத்தக கண்காட்சி களை கட்டியது. அங்கு அமைக்கப்பட்டுள்ள, 225க்கும் மேற்பட்ட அரங்குகளில், குவிக்கப்பட்டுள்ள புத்தகங்களின், 'வெரைட்டி', அவர்கள் இடையே பிரமிப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக, ஸ்டால் எண், 216ல் அமைக்கப்பட்டுள்ள, 'காலைக்கதிர்' நாளிதழின், 'பட்டம்' அரங்கில், 'தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்' சார்பில், புகழ்பெற்ற எழுத்தாளர்களான இந்திரா சவுந்தர்ராஜன், வரலொட்டி ரங்கசாமி, ஜி.எஸ்.எஸ்., ஆர்னிகா நாசர், திருப்பூர் மதிவண்ணன், ஹேமா பாஸ்கர் ராஜூ, தராசு ஸ்யாம், ராஜாராம், ஆர்.வி. பதி, ராஜசேகரன், சந்திர சேகரன், ரஜத், வெங்கட் சுப்பிரமணியம், முத்தாலங்குறிச்சி காமராசு, மோகன்தாஸ், ஜி.வி.ரமேஷ்குமார் எழுதிய புத்தகங்கள், அந்துமணியின், 'பார்த்தது கேட்டது படித்தது' 15 பாகங்கள், சமஸ் எழுதிய, சோழர்கள் இன்று புத்தகம், மகா பெரியவா தொகுதிகள் உள்ளிட்ட ஆன்மிக, அறிவியல், நவீன கதை புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

நேற்று, 'உண்ணும் உணவும், பொருளியலும்; அன்றாட பயன்பாட்டில் பொருளியல்' என்ற தலைப்பு களில் மணி, 'அடுப்பில்லா சமையல்' தலைப்பில் கவிதா, கருத்தரங்கில் பேசினர். மாலை, 'பசியும் சுவையும்' தலைப்பில், நாஞ்சில் நாடன் பேசினார். திரளான வாசகர் கள் பங்கேற்றனர்.

அனுமதி இலவசம் என்பதால், டிச., 9 வரை, காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை அரங்குகளை பார்வையிடலாம். மாலை, 6:00 மணிக்கு, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம், கருத்தரங்கம் நடக்கிறது.

'விசிட் அடிப்பது வழக்கம்'

எம்.நவீன், இடைப்பாடி: எங்கு புத்தக கண்காட்சி நடத்தப்பட்டாலும், அங்கு முதலில் ஒரு, 'விசிட்' அடிப்பது வழக்கம். அதுபோல் வந்தேன். ஜெயகாந்தன் எழுதிய, ஒரு மனிதன், ஒரு வீடு; ரேண்டம் பைரோன் எழுதிய சீக்ரட் புத்தகம், ரசவாதி உள்ளிட்ட புத்தகங்களை வாங்கியுள்ளேன். கதையோட்டத்தில் தத்துவம் மற்றும் வாழ்வியல் முறை சார்ந்த புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். சேலம், ஈரோடு, நாமக்கல்லில் புத்தக கண்காட்சிகளில் பங்கேற்பேன். அவற்றோடு ஒப்பிடும்போது சேலத்தில் புத்தக கலெக்ஷன்கள் அதிகம் உள்ளன.

'குழந்தைகளுக்கும் ஊக்கம்'

ஜி.ஆர்.திவ்யா, இரும்பாலை: நான்கு ஆண்டுகளாக புத்தக கண்காட்சியில் பங்கேற்று வருகிறேன். தற்போது என் குழந்தைகளுக்கு பல புத்தகங்களை வாங்கியுள்ளேன். திருக்குறள், புதிர் புத்தகங்களால், தெரியாத விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். தற்போது மொபைல் போனில் மூழ்கி வருகின்றனர். அதை தடுக்க குழந்தைகளில் இருந்தே வாசிப்பு திறனை அதிகப்படுத்த வேண்டும். இதற்காகவே என் குழந்தைகளையும் அழைத்து வந்ததால், அவர்களுக்கும் ஊக்கம் ஏற்படுத்தும்.

'புத்தக கலெக் ஷன்கள் அதிகம்'

சி.இளஞ்செழியன், அரூர்: புத்தக கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் போடப்பட்டிருந்த புத்தக கண்காட்சியில் கலெக்ஷன்கள் குறைவாக இருந்தன.

சேலத்தில் அதிகளவில் உள்ளன. ஆங்கில புத்தகங்களை விரும்பி படிப்பேன். தத்துவம், த்ரில்லர், சீரீஸ் புத்தகங்களை வாங்கியுள்ளேன்.

நான் தேடும் புத்தகங்களை கடைகளில் வாங்குவது மிக சிரமமாக இருக்கும். ஆனால் இங்கு அனைத்து வகைகளும் உள்ளன.

'சொர்க்கமாக இருக்கும்'

வ.சொர்ணாஞ்சலி, நாமக்கல்:

புத்தக விரும்பிகளுக்கு இது சொர்க்கமாக இருக்கும். இந்திய எழுத்தாளர்கள், பாரின் எழுத்தாளர்கள், மொழியாக்க நுால்கள், குழந்தை இலக்கியம் என புத்தக வெரைட்டி ஏராளமாக உள்ளன. 'சைக்காலஜி ஆப் மணி' என்ற புத்தகம் வாங்கியுள்ளேன். கல்லுாரி முடித்ததும், பிஸினஸ் செய்யும் ஐடியா இருப்பதால், அதுதொடர்பான புத்தகங்களை தேடி வந்தேன். நிறைய உள்ளன. போட்டித்தேர்வு புத்தகங்களும் ஏராளமாக உள்ளன.






      Dinamalar
      Follow us