/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப்பணி:எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு
/
ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப்பணி:எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு
ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப்பணி:எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு
ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப்பணி:எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு
ADDED : செப் 28, 2025 02:28 AM
சேலம்:பா.ம.க.,வின், சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், அவரது தொகுதி மேம்பாடு நிதி, 42.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேற்று தொடங்கி வைத்தார்.
அதன்படி அய்யம்பெருமாம்பட்டி ஊராட்சி சமுதாயக்கூடத்தில், 18.60 லட்சம் ரூபாய் மதிப்பில் சமையலறை, உணவருந்தும் கூடம் கட்டுதல்; அங்குள்ள மண் சாலைக்கு பதில் பேவர்பிளாக் சாலை, கம்பிவேலி அமைத்து பாதுகாத்தல்; சர்க்கார் கொல்லப்பட்டியில் கட்டப்படும் சமுதாயக்கூட மாடியில், 18.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சமையலறை, உணவருந்தும் இடம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் சிவதாபுரம், 22வது வார்டில், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்ட மயான எரிமேடையை, பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தார். மாநகர், மாவட்ட செயலர் கதிர்
ராசரத்தினம், மாவட்ட தலைவர் கோவிந்தன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.