/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொடுமுடி-பழனி இடையே 'பாடாவதி' பஸ் புதிய பஸ் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

ADDED : நவ 06, 2024 01:47 AM
கொடுமுடி-பழனி இடையே 'பாடாவதி' பஸ்
புதிய பஸ் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
கொடுமுடி, நவ. 6-
கொடுமுடியில் இருந்து பழனிக்கு, புதிய பஸ் இயக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
கொடுமுடியில் இருந்து பழனிக்கு, முத்துார், வெள்ளகோவில், மூலனுார் வழியாக, கொடுமுடி கிளையில் இருந்து அரசு பஸ் இயக்கப்படுகிறது. பழையதாகி விட்டதால், மழை காலங்களில் பல இடங்களில் ஒழுகுகிறது. இருக்கையின் குஷன் குழி விழுந்து காணப்படுகிறது. இதனால் வயதான பயணிகள், உடல் வலி ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதற்கு தீர்வாக புதிய பஸ்ஸை இயக்க, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. அதேசமயம் பழைய பஸ் என்பதால், பெரும்பாலானோர் தனியார் பஸ்களை நாடுகின்றனர். மூத்த குடிமக்கள், பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு, கொடுமுடி போக்குவரத்து கிளை அதிகாரிகள், மாற்று பஸ் இயக்க ஆவண செய்ய, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.