/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோல்கட்டா காளி அலங்காரம் தரிசனம் செய்த பக்தர்கள்
/
கோல்கட்டா காளி அலங்காரம் தரிசனம் செய்த பக்தர்கள்
ADDED : நவ 02, 2024 04:37 AM
மேட்டூர்: மேச்சேரி, பத்ரகாளியம்மனுக்கு நேற்று கோல்கட்டா காளி அலங்காரம் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும், அமாவாசைக்கு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அதன்படி ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு, நேற்று பத்ரகாளியம்மனுக்கு கோல்கட்டா காளி அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று காலை, 10:00 மணி முதல் கோவிலுக்கு பக்தர்கள் வரத்துவங்கினர். பத்ரகாளியம்மனை, பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.மேட்டூர் அணை முனியப்பன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேட்டூர் அணை பூங்கா அருகே, மேட்டூர்-கொளத்துார் நெடுஞ்சாலையில் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை பக்தர்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம், ஸ்ரீமலை மாதேஸ்வரன் சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக நேற்று, சேலம், மேட்டூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.