ADDED : மார் 10, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி:இடைப்பாடி அருகே ஒட்டப்பட்டி ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி, ஆனந்த கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் மாசி உற்சவம் கடந்த மாதம், 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று அதிகாலை, தீ மிதி விழா நடந்தது.அதில், திரளான பக்தர்கள், குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் மயான கொள்ளை, ஆனந்தாயி அங்காளம்மன் சுவாமி திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

