/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அலகு குத்தி, பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்
/
அலகு குத்தி, பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்
ADDED : மே 02, 2024 11:56 AM
ஓமலுார்: ஓமலுார் அருகே காமலாபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏப்., 15ல் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு சக்தி அழைத்தல் நடந்தது. நேற்று அதிகாலை முதல், பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், சக்தி, பூங்கரகம், அக்னி கரகம் எடுத்து திருவீதி உலா வந்து தரினசம் செய்தனர்.
திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 9:00 மணி முதல், கோவில் வளாகத்தை சுற்றி திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு வழிபட்டனர். மேலும் கோவில் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று வண்டி வேடிக்கை, தீப்பந்தம் ஏந்தி ஆடுதல், சத்தாபரணம், நாளை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, திருவீதி உலா, நாளை மறுநாள் மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

