ADDED : அக் 12, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் மத்திய சிறையில், அமைச்சு பணியாளர்களாக, 3 பெண்கள் பணிபுரிகின்றனர். சமீபத்தில் அவர்களை, சிறை அலுவலர் ஒருவர், தகாத வார்த்தைகளில் பேசியதாக, சிறைத்துறை டி.ஜி.பி.,க்கு புகார் சென்றது. இதுதொடர்பாக, கோவை டி.ஐ.ஜி., ஜெயபாரதி, நேற்று முன்தினம், சேலம் மத்திய சிறையில், பெண் ஊழியர்களிடம் விசாரித்தார்.
தொடர்ந்து புகாருக்கு ஆளான சிறை அலுவலரிடமும் விசாரித்தார். இதன் அறிக்கை டி.ஜி.பி.,க்கு தாக்கல் செய்யப்படும் என, சிறை அலுவலர்கள் தெரிவித்தனர்.