ADDED : மே 16, 2026 04:27 AM
சேலம்; சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்-காணிப்பாளர் கோபாலன் அறிக்கை:
எளிதான முறையில் டிஜிட்டல் அஞ்சல் சேவையை வழங்க, 'Click N Book' சேவையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன் முக்கிய அம்-சங்களாக, கண்காணிக்க கூடிய உள்நாட்டு அஞ்சல் பொருட்களை ஆன்லைனில் பதிவு செய்-யலாம். பதிவு செய்தவர், செய்யாதவர்களும் பயன்படுத்தலாம். அனைத்து தலைமை அஞ்ச-லங்கள் மற்றும் டெலிவரி துணை அஞ்சலகங்க-ளிலும் இச்சேவை வழங்கப்படும். ஒரு பரிவர்த்த-னையில் அதிகபட்சம், 5 கிலோ அல்லது 5 பொருட்கள் பதிவு செய்யலாம்.
இதில், 500 ரூபாய்க்கு குறைவான பரிவர்த்த-னைக்கு, 50 ரூபாய் பிக்கப் கட்டணம். 500 ரூபாய்க்கு மேல் இலவச பிக்கப். விடுமுறை நாட்களை தவிர்த்து, மற்ற நாட்களில் காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரையும், மதியம், 1:00 முதல், மாலை, 4:00 மணி வரையும் கிடைக்கும். பதிவு செய்ய கடைசி நேரமாக, காலை, 9:30; மதியம், 12:30 மணி என நிர்ணயிக்-கப்பட்டுள்ளது. மதியம், 12:30 மணிக்கு முன் முன்பதிவு செய்தால், அதே நாளில் பிக்கப் கிடைக்கும். இச்சேவையை பெற, கியூ.ஆர்., கோட் மூலம் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். அது தோல்வியில் முடிந்தால், 7 நாட்-களில் கட்டணம் திரும்ப பெறலாம். பதிவு செய்த பின் ரத்து செய்ய முடியாது.
