/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
/
சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
ADDED : நவ 26, 2024 01:15 AM
சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில்
மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
மேட்டூர், நவ. 26-
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மேட்டூர் வட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், நேற்று காலை ஊர்வலமாக சென்று சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் சப்-கலெக்டர் பொன்மணி பேச்சுவார்த்தை நடத்தினார். மேட்டூர் தாசில்தார் ரமேஷ், ஆர்.ஐ., வெற்றிவேல் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். அதில், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட, வட்ட நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணன், குணசேகரன், அம்மாசி, ஜான் பெர்ணான்டஸ், சி.ஐ.டி.யு., மாவட்ட துணை செயலாளர் கருப்பண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது நிர்வாகிகள், சப்-கலெக்டரிடம் கூறியதாவது:
தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மாதம் தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். மூன்று சக்கர வாகனம் வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும். தையல் இயந்திரம், பேட்டரி வீல்சேர், உதவி உபகரணங்கள், உதவி தொகை, வங்கி கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் கட்டும் வணிக கட்டடங்களில், 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைபட்டா வழங்கவும், மாதந்தோறும் சிறப்பு முகாம் நடத்தவும், இதர கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் சப்-கலெக்டர் தெரிவித்தார். அதனை ஏற்று, மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.